லயன் ஏர் விமான குரல் பதிவு கருவி கண்டுபிடிப்பு


கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தோனீசியாவின் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தின் விமானிகள் அறையின் குரல்பதிவுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அந்நாட்டின் கடற்படை கொண்டிருக்கும் நவீன சாதனங்களின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

 

இந்த கருவியை கண்டுபிடித்திருப்பதன் மூலம் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி லயன் ஏர் விமானத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக ஜெட் ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே  ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

 

189 பயணிகளை காவு வாங்கிய விமான விபத்து குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

விமானத்தின் காணாமல் போன பாகங்களை தேடுகின்ற பணியின் ஒரு பகுதியாக விமானிகள் அறையின் குரல்பதிவுக் கருவி கிடைத்துள்ளதை இந்தோனேசிய கடல்வழி போக்குவரத்து அமைச்சர் ரிட்வான் ஜமாலுதீன் உறுதி செய்துள்ளார்.

Add new comment

16 + 1 =