கனடா நாட்டவருக்கு சீனா மரண தண்டனை விதிப்பு


ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்கிற கனடா நாட்டவருக்கு சீனா மரண தண்டனை விதித்துள்ளது.

 

கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனை போதார் என்று இன்னொரு நீதிமன்றம் கூறிவிட்டது.

 

இந்த மரண தண்டனை தீர்ப்பு சீனாவுக்கும், கனடாவுக்கும்  இடையேயான தூதாண்மை உறவை பாதிக்குkம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

சீன நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா கேட்டுக்கொண்டபடி, சீன பெருநிறுவனமான ஹுவாவே நிறுவனத்தின் முக்கிய அதிகாரியை கனடா கைது செய்ததை அடுத்து, எதிர்பாராத விதமாக ராபர்ட் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Add new comment

4 + 1 =