டிரம்பின் “எல்லை நெருக்கடி” உரையை கண்டித்த கத்தோலிக்க குழுக்கள்


எல்லையில் நெருக்கடி என்று அவர் கூறிய 9 நிமிட உரையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடித்தவுடன், அவருடைய விவாதங்களை கத்தோலிக்க குழுக்களும், பிறரும் பெருமளவு கண்டித்துள்ளனர்.

 

அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்ட முதலாவது இத்தகைய நிகழ்வை, மின்னஞ்சல், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளில் உண்மையற்றது, சட்டத்திற்கு புறம்பானது என்று பலரும் கருத்து தெரிவித்து கோபத்தை காட்டியுள்ளனர்.

 

சுவர் கட்டுவதில் ஈடுபாடு காட்டாதவர்கள், அதிக இரக்கத்தை காட்டி நாட்டின் குடியேற்ற பிபரச்சனைக்கு வேறுபட்ட தீர்வை நாடாளுமன்றம் காண வேண்டும் என்று அவர்கள் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை தடுப்புதற்கு தடுப்பு சுவர் கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம்பிடிப்பதால் 23 நாடகளாக அரசு செயல்படாமல் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

11 + 7 =