மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டணி


மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

 

மக்களவை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் வலிமையான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில். உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருகட்சிகள் கைகோர்த்துள்ளன.

 

உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்றது.

 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் இந்த கூட்டணியை உறுதி செய்தனர்.

 

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பிற இரு தொகுதிகளை சிறு சிறு கட்சிகளுக்கு அளிக்கவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Add new comment

12 + 5 =