மனிதகுலத்தின் தேவைகளை திருச்சபை வழங்க வேண்டும் – பாப்பிறை தூதர்


மனித குலத்தின் தேவைகளை திருச்சபை வழங்க முற்பட வேண்டுமென இந்தியாவுக்கான பாப்பிறை தூதர் பேராயர் ஜியம்பட்டிஸ்டா டிக்ராட்ரோ வலியுறுத்தியுள்ளார்.

 

லத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் மன்றமாக இருக்கின்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அமர்வை சென்னையில் தொடங்கி வைத்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

நற்செய்தியை வாழ்வதில் திருச்சபையின் மகிழ்ச்சியாக இருக்கின்ற மனித குலத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று பேராயர் ஜியம்பட்டிஸ்டா டிக்ராட்ரோ கூறினார்.

 

இதுவொரு ஆயர்களின் கூட்டமல்ல. தேசத்திற்கு சாட்சியம் அளிக்கின்ற ஒரு கூட்டம். நமது வாழ்வின் மூலம் நற்செய்தியின் மகிழ்ச்சிக்கு சான்று பகர்வதற்கு நமது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவர் மும்பை உயர் மறைமாவட்ட கர்தினால் ஆஸ்வால்ட் கிராசியஸ், இந்திய திருச்சபை மறைபரப்பை மறுபடியும் உயிர்ப்பிக்க செய்ய வேண்டுமென விரும்புவதாக கூறியுளார்.

 

முழு உற்சாகத்தோடும், சேவைக்கான முழு அன்போடும் இதனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

 

ஆண்டறிக்கையை வாசித்த பின்னர், புதிய உறுப்பினர்களை இந்திய ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளரான டெல்லி உயர் மறைமாவட்ட பேராயர் அனில் குட்டோ வரவேற்றார்.

 

இந்த ஆயர்கள் பேரவையில் இருந்து ஓய்வுபெறுகின்ற உறுப்பினர்களையும் அனில் குட்டோ அறிவித்தார்.  

Add new comment

12 + 2 =