உலக இளைஞர்கள் நாளில் கலந்து கொள்ளும் பிலிப்பின்ஸ்


பனாமா நாட்டில் ஜனவரி 22 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகின்ற உலக இளைஞர்கள் நாளில் சில ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர் உள்பட குறைந்தது 70 பிலிப்பீன்ஸ் இளைஞர்கள் கலந்துகொள்ளர் என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த மாதத்தின் இறுதியில் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் நடைபெறும் இந்த பெரிய நிகழ்வுக்கு முன்னதாக, மேலதிக இளைஞர்கள் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறைந்தது 70 புனிதப் பயண இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்துள்ளனர் என்று இளைஞர்களுக்கான பாப்பிறை ஆணையத்தின் செயலதிகாரி அருட்தந்தை கோனேகுன்டோ கார்கான்டா கூறியுள்ளார்.

 

தங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்ப வேண்டிய குழுக்கள் இன்னும் உள்ளன என்றும் அவர் கூறினார்.

 

இந்த சர்வதேச கூட்டத்தில் பிலிப்பீன்ஸை சேர்ந்த குறைந்தது 250 பேர் கலந்து கொள்வர் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

 

இந்த ஆண்டை இளைஞர்களின் ஆண்டாக பிலிப்பீன்ஸ் அறிவித்துள்ள நிலையில், இந்த இளைஞர்கள் மாநாடும் வருகிறது.

 

1521ம் ஆண்டு தொடங்கி பிலிப்பீன்ஸில் கிறிஸ்தவ மதம் பரவ தொடங்கிய 500வது ஆண்டை அடையாளப்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு ஆண்டு அந்நாட்டு ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

போலந்தை சேர்ந்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1985ம் ஆண்டு உலக இளைஞர் நாளை ஏற்படுத்தினார்.

 

இதன் முதல் நிகழ்வு 1986ம் ஆண்டு ரோமில் நடைபெற்றது. அது முதல் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாடுகளின் பல்வேறு நகரங்களில் இது நடத்தப்பட்டு வருகிறது.

Add new comment

2 + 16 =