அதிகரிக்கும் பிளாஸ்டிக் பிரச்சனை - செயல்பட அழைக்கும் பேராயர்


இந்தோனீஷியாவில் அதிகரித்து வருகின்ற நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகளின் பிரச்சனையை சமாளிக்க பங்கு மக்கள் செயல்பட வேண்டுமென பேராயர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார்.

 

இவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகளை குறைப்பதற்கு அழைப்புவிடுப்போரில் ஜகார்த்தா பேராயர் இக்னோசியஸ் சுஹார்யோவும் இணைந்துள்ளார்.

 

ஜகார்த்தா குடாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றப்போவதாக இந்தோனீசிய ராணுவம் அறிவித்த சில மாதங்களுக்கு பின்னர், ஜகார்த்தா பேராயரின் இந்த அழைப்பும் வந்துள்ளது.

 

நாடு முழுவதும் எல்லா பங்குகளிலும் ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் காட்சிப்படு்த்தப்பட்ட ஒரு காணொளி செய்தி வழியாக, சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் மோசமாக பாதிப்புக்களை வழங்குவதால், எல்லா கத்தோலிக்கர்களும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறைக்க வேண்டுமென இந்த பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மலை அளவில் குப்பைகள் சேர்ந்து, அவை கடலில் கொட்டப்படுவதை தடுக்க ஆசியாவிலுள்ள பிற நாடுகள் நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில் இந்த செய்தியும் வந்துள்ளது.

 

இயற்கை பாதுகாப்பு பரப்புரை திட்டத்தினால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்துள்ள தாய்லாந்து, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பதற்கு வில்லா சந்தை போன்ற சில்லறை வர்த்தகர்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

குப்பைகளை மிக மோசமாக கையாளுவதில் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனீஷிய நாடுகள், முன்னிலையில் உள்ளதாக கருதப்படுகிறது.

 

உலக பெருங்கடல்களில் சுமார் 6 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் ஒவ்வோர் ஆண்டும் கொட்டப்படுகின்றன என்று கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் தெரிவித்தது.

 

ஓராண்டில் 640 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகளை இந்தோனீசியா கையாள்வதாகவும், 32 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் பெருங்கடலை சென்றடைவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த நாட்டில் உருவாகும் மொத்த குப்பைகளில் 11 விழுக்காடு தலைநகரான ஜகார்த்தாவில் உற்பத்தி செய்யப்படுவதால், இந்நகரம் குப்பைகளால் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

Add new comment

14 + 2 =