வேறு பொறுப்பில் அலேக் வர்மா நியமனம்


மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், மத்திய அரசு விசாரணை மேற்கொண்டது.

 

லஞ்சப் புகார்களைத் தொடா்ந்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிவிட மத்திய அரசு உத்தரவிட்டது.

 

சி.பி.ஐ. இணை இயக்குநா் நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நிலையில்,. தனது கட்டாய விடுப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக நடைபெற்றுள்ள அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்நதார்.

 

மத்திய அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் விலக்கிய நிலையில், சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றார்.

 

தலைமையமைச்சர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

 

அலாக் வர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தலைமையமைச்சர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் பரிந்துரையை ஏற்று, ஊழல் கண்காணிப்பு குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

1 + 0 =