மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டிற்கு மாநிலம் நிதி ஒதுக்கக முடியாது - மம்தா


ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பாக ஒதுக்கப்படும் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

 

இந்தியாவில் 10 கோடி ஏழை குடும்பத்தினரக்கு ரூ. 5 லட்சம் வரையான மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படுமென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

 

இதற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கும் எனக் கூறி, ஜார்க்கண்டின் ராஞ்சியில் தலைமையமைச்சர் மோடி தொடங்கி வைத்தார்.

 

மத்திய அரசு, மாநில அரசுகளும் சேர்ந்து எல்லா ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 - 1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், மீதி தொகையை மாநில அரசும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டது.  

 

இந்தியா முழுதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் இதனால் எளிதாக பயன்பெறுவார்கள்.

 

இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Add new comment

2 + 1 =