மத்திய புலனாய்வு துறை இயக்குநர் அலேக் வர்மா பதவி நீக்கம்


இந்திய மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இயக்குநர் அலோக் வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 10ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு சுமார் 2 மணி நேரம் நடத்திய கூட்டத்திற்கு பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

ஆளும் பாரதிய ஜனதா அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது.

 

மேலும், தேர்வுக்குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது. 

 

அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்குகின்ற முடிவு 2:1 பெரும்பான்மை முடிவின் படி எடுக்கப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்று சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அலோக் வர்மா விடுப்பில் சென்றிருந்தபோது இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவின் செய்திருந்த பெரும்பாலான பணியிட மாற்ற உத்தரவுகளை அலோக் வர்மா ரத்து செய்தார்.

 

ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான இந்திய தலைமையமைச்சர் மீதான குற்றச்சாட்டு மீதான புலனாய்வை தடுக்கவே அலேக் வர்மாவுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், அலுவலகம் வந்து தனது பொறுப்பை மீண்டும் அலோக் வர்மா ஏற்ற நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Add new comment

1 + 1 =