அதிபர் டிரம்பின் நிறவெறிக்கு எதிராக எழும் இந்திய வம்சாவளி பெண்


புலம்பெயர்ந்தவர்களை அழிக்கும் வகையில் செயல்டும் டிரம்ப்பை எதிர்த்து போராட போவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

 

அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்து வருகிறார். அதனால், நிலைமை தொடர்ந்து சிக்கலாகியுள்ளது.

 

எனினும் இந்த எல்லைச்சுவரை கட்ட 5 பில்லியன் டாலர் ஒதுக்க அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் டிரம்ப்பை தவறாக தேர்ந்தெடுத்த காரணத்தால், 8 லட்சம் ஊழியர்களும் கூட்டாட்சி அரசின் அனைத்துவிதமான சேவைகளும் அதிபரின் தற்பெருமை திட்டத்திற்காக பணயம் வைத்துக்கொண்டிருப்பதாக ஹாரீஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் கொள்கைகள் மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். .

 

அமெரிக்காவிற்குள் குடியேறியவர்கள் மீது சட்டபூர்வ மற்றும் மனிதாபிமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும், அதிபர் டிரம்பின் செயல்களை எதிர்த்து தொடர்ந்து போராடப்போவதாகவும் ஹாரீஸ் கூறியுள்ளார்.

Add new comment

6 + 0 =