பயங்கரவாத புரளியை பரவலுக்கு எதிராக மின்டணாவோ கர்தினால் எச்சரிக்கை


ஜனவரி மாதம் தன்னாட்சி முஸ்லிம் பிரதேசத்தை உருவாக்குவது தொடர்பாக நடைபெறும் பொது வாக்கெடுப்புக்கு  முன்னால், பயங்கரவாத புரளி பரவுவதற்கு எதிராக பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதி திருச்சபை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்த நகரத்தை ஆயுதம் தாங்கியோர் தாக்கக்கூடும் என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பின்னர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று கோடேபாடோ மறைமாவட்ட கர்தினால் ஒரியாண்டோ குவேடோ கேட்டுக் கொண்டுள்ளார்.

 

புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் மாலையில், இருவர் உயிரிழந்து, 30 பேர் காயமடைந்த வணிக மையம் ஒன்றுக்கு வெளியே நிகழந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இன்னும் இந்த நகரில் ஸ்திரமின்மையும், பீதியும் நிலவுகிறது.

 

இந்த பகுதியில் ஒலிபரப்பாகும் கத்தோலிக்க வானொலி நிலையம் மூலம் பேசிய கர்தினால், பீதி நம்மை ஆட்க்கொள்ளவிட வேண்டாம். அமைதியாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

 

உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்த அனைவரும் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மோரோ கிளர்ச்சியாளர்களுக்கு அமைதி பேச்சுவார்த்தையாளராக செயல்பட்ட ஒப்லேட் மறைபரப்பு சபை அருட்தந்தை எலிஸ்யே மெர்காடோவும், பொது வாக்கெடுப்பை முன்னிட்டு கவனமுட்ன் இருக்க வேண்டுமென கூறியுள்ளார்.

 

இந்த நகரை சிறப்பாக பாதுகாக்க அதிகாரிகள் இயன்றது அனைத்தையும் செய்து வருவதாக கோடேபாடோ மேயர் சிந்தியா குலானி-சையத் உறுதியளித்துள்ளார்.

Add new comment

7 + 2 =