மணிலாவின் பிரமாண்ட “கறுப்பு நசரேன்” பேரணி தொடக்கம்


பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் “கறுப்பு நசரேன்” பெருவிழா திருப்பலியின்போது மறையுரையில், மத வெறிக்கு எதிராக கர்தினால் லுயிஸ அன்டணியோ டேக்லே எச்சரித்திருக்கிறார்.

 

மதவெறியர்களையும், பக்தர்களையும் வேறுப்படுத்தி பார்ப்பதற்கு நள்ளிரவு கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களிடம் கர்தினால் அறிவுறுத்தியுள்ளார்.

 

நசரேன் உருவப்படத்தை பூங்கா ஒன்றிலிருந்து அருகிலுள்ள தேவாலயம் ஒன்றுக்கு மாற்றுகின்ற நிகழ்வை கொண்டாடும் இந்த விழா மணிலாவின் குய்யபோ மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றாலயத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் மில்லியன்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

இந்த பிரமாண்ட பேரணியில் கலந்து கொள்வது தங்களின் பாவத்தின் பரிகாரமாக அமையும் என்று மக்கள் நம்புகின்றனர்.

 

உண்மையான பக்தர்கள் மட்டுமே இந்த கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும் என்று கர்தினால் டேக்லே கூறியுள்ளார்.

 

மதவெறியர்களை போலல்லாமல் பக்தர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இறைவனை அன்பு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

 

மத வெறியர்கள் அன்பு செய்வதில்லை. மத வெறியர்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே தேடுகிறார்கள்.

 

உண்மையான பக்தர் அன்பால் ஆட்ப்பட்டவர். இதைதான் இயேசு நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளார் என்று கர்தினால் டேக்லே கூறியுள்ளார்.

Add new comment

2 + 2 =