Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இணையம் மூலம் ‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’
‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய சேவையை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் காவல் இயக்குநர் சீமாஅகர்வால் ஆகியோர் புதன்கிழமை தொடங்கி வைத்தனர்.
பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்க வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.
- தனிநபர் விவரம் சரிபார்ப்பு
- வேலை நிமித்தமான சரிபார்ப்பு
- வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு
- வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு
இந்த சேவைக்கு தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500, தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இணையதளம் வழியாக கடன் பண அட்டை, பண அட்டை மற்றும் இணைய வழி வங்கி சேவை மூலம் இந்த கட்டணத்தை செலுத்தலாம்.
விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல் துறையின் வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில், ஒரு நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரத்தை சரிபார்ப்பதே காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கமாகும். .
விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடிக்கப்படும். இதற்காக காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இjதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.
காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள QR குறியீட்டினை ஸ்கேன் செய்தும் அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள சரிபார்ப்பு என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
Add new comment