காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவின் பொதுச் செயலாளராக திருநங்கை


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய அளவில் நிர்வாகியாக முதல் முறையாக பொறுப்பேற்றுள்ளார்.  

 

பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான அப்சரா ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் முன்னிலையில் பொதுச் செயலாளராக பெறுப்பேற்று கொண்டார்.

 

பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றம், சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான போராட்டம், பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக மகிளா காங்கிரஸுடன் இணைந்து  இந்தியா முழுவதும் செயல்பட போவதாக அப்சரா ரெட்டி ஏற்புரையில் தெரிவித்துள்ளார்.

Add new comment

7 + 2 =