டெல்லியில் “ஏதேன் தோட்டம்” எனப்படும் சுற்றுச்சூழல் ஆன்மிக மையம்


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தியானம் செய்வதற்காக சுற்றுச்சூழல் ஆன்மிக மையம் ஒன்றை டெல்லி உயர் மறைமாவட்டம் உருவாக்கியுள்ளது.

 

நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருக்கும் வீடுகள், இயற்கையான உணவு முறை மற்றும் கால்நடைகள் போன்ற சிறப்பு அம்சங்களோடு இந்த ஆன்மிக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

“ஏதேன் தோட்டம்” என்று அழைக்கப்படும் இந்த சுற்றுச்சூழல் ஆன்மிக மையம், “சிக்னீஸ் இந்தியா” என்கிற கத்தோலிக்க ஊடக நிறுவனத்தின் தேசிய அதிபரான அருட்தந்தை ஸ்டான்லி கோச்சிசீராவால் நிர்வகிக்கப்படுகிறது.

 

இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நகரத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்த சுற்றுச்சூழல் ஆன்மிக மையத்தில், பசுக்கள், ஆடுகள், நாய்கள், கோழிகள் மற்றும் வாத்துக்களும் உள்ளன.

 

இந்த மையத்தில் காணப்படும் அனைத்தும் இயற்கை எழிலோடு அமைந்துள்ளன. பூங்காக்களும், மரங்களும் உடைய இந்த ஆன்மிக மையத்தில், செயற்கையாக உருவாக்கப்பட்ட குளமும் உள்ளது.

 

2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணித்திட்டம் 2018ம் ஆண்டு இயங்கத் தொடங்கியது.

 

இந்த பணித்திட்டம் முழுமையாக முடிவடைந்த பின்னர், மக்கள் தங்களின் ஆன்மிக வாழ்க்கையை புதுப்பித்து கொள்ளும் வகையில் 10 வீடுகள் இந்த ஆன்மிக மையத்தில் இருக்கும்.

 

இங்கு வருவோருக்கு ஆயிரம் வார்த்தைகளை பேசுகின்ற அமைதியான இடமாக இந்த இடம் இருக்கும் என்று அருட்தந்தை ஸ்டான்லி கூறியுள்ளார்.

 

சிறிது காலம் தங்கி தங்களை பற்றி சிந்தித்து, கண்டறிந்து, தங்களை புதுபித்துக்கொள்ள விரும்புவோர் இங்கு வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Add new comment

12 + 3 =