ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அனுமதி – மக்கள் கண்டனம்


துத்துக்குடியிலுள்ள ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றமும் அதே தீா்ப்பை வழங்கியுள்ளதை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கண்டித்துள்ளனர்.

 

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மக்கள் போராட்டம் நடந்திய போராட்டத்தில் 13 பொதுமக்கள் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர்.

 

தொடாந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட, அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கை விசாரித்ததேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் என தெரிவித்துவிட்டது.

 

தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்த முழு முன்னேற்பாடுகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றிய பின்னர் அந்த ஆலையை திறக்க தீர்ப்பளித்துள்ளது.

 

உச்ச நீதிமன்றத்தின் இற்த உத்தரவை கண்டித்தள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் அரசு கொள்கை முடிவு எடுத்து இந்த ஆலையை மூட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Add new comment

1 + 0 =