மீண்டும் சிபிஐ இயக்குநரானார் அலோக் வர்மா – மோடி அரசுக்கு பின்னடைவு


மோடியின் ஆளும் அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக இருக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளிததுள்ளது.

 

சிபிஐ இயக்குநரை மாற்றுவதோ, அவர் வேலை செய்யாமல் வைப்பதோ தேர்நதெடுக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் ஆலோசனையின்றி மத்திய தன்னிச்சையாக முடிவெடுக்க சட்டப்படி அதிகாரமும் இல்லையென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையிலான அதிகாரப் போட்டியால், இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

 

மத்தியப் புலனாய்வு துறை, ஊழல் பற்றி விசாரணை மேற்கொள்ளும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனமாகும்.

 

 

சிபிஐ இயக்குநர் பணிகளில் இருந்து தன்னை மாற்றியும், கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக அலோக் வர்மா இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

தனக்கு இளையவரான ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாருக்கு நடவடிக்கை எடுத்ததால், தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதற்கு எதிராக நியாயம் கேட்டு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த தீர்ப்பு ஆளும் மோடியின் அரசுக்கு பெரும் பினன்டைவாக பார்க்கப்படுகிறது.

 

அதிகாரம் இல்லாத இடத்தில் அரசு அதிகாரம் செலுத்த முயன்றிருப்பதாக பெரும் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

Add new comment

11 + 8 =