மணிலாவில் 210 லட்சம் பேர் கூடும் நசரேன் பெருவிழா


ஜனவரி 9ம் தேதி மணிலாவில் கொண்டாடப்படும் கறுப்பு நசரேன் பெருவிழாவிற்கு குறைந்தபட்சம் 210 லட்சம் மக்கள் கூடுவதை எதிர்பார்ப்பதாக பிலிப்பீன்ஸ் திருச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நாசரேன் உருவப்படத்தை ஒரு பூங்காவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு கொண்டு செல்லுகின்ற பேரணியில் குறைந்தது 50 லட்சம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காலணி அணியாமல் வெறும் காலால் பக்தர்கள் பற்கேற்கின்ற இந்த நிகழ்வு, கடந்த ஆண்டு 22 மணிநேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

குய்யப்போ மாவட்டத்திலுள்ள இந்த தேவாலயத்தின் தலைமை பங்குத்தந்தை அருட்தந்தை டேனிச்சி ஹூய், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தொடங்கிய இந்த கொண்டாட்டம், உண்மையிலேயே பெருவிழாவான ஜனவரி 9ம் தேதி உச்சக்கட்டத்தை அடையும் என்று தெரிவித்துள்ளார்.  

 

அரசிடம் இருந்து வந்த தகவல்களின்படி, கடந்த ஆண்டு, இந்த கொண்டாட்டத்தின் தொடக்கத்தில் இருந்து 210 லட்சம் பேர் முடிவு வரை கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இந்த ஆண்டு வருகின்ற பக்தர்கள் கடந்த ஆணடைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இந்த மத நிகழ்வின்போது, பிலிப்பீன்ஸின் அரசியல் தலைவர்களுக்காக பக்தர்கள் அனைவரும் செபிக்க வேண்டும் என்று ‘கறுப்பு நசரேன்‘ சிறிய பசிலிக்காவின் தலைமை பங்குத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

Add new comment

12 + 0 =