மத வன்முறைக்கு இந்திய ஆளும் அரசை சாடும் பிரிட்டன் அறிக்கை


இந்து கடும்போக்காளர்களால் நடத்தப்படும் வன்முறைகளில் இருந்து மத சிறுபான்மையினரை பாதுகாக்க இந்திய அரசு தவறிவிட்டது என்று பிரிட்டன் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று விமர்சனம் செய்துள்ளது.

 

இந்தியா இந்துக்களுக்கே என்று வரையறுக்கின்ற தேசியவாத இந்துத்துவ கருத்தியல் இந்தியாவில் தீவிரமடைந்திருப்பது, இந்நாட்டில் மத ஒடுக்குமுறையை அதிகரிக்க செய்துள்ளது என்று சர்வதேச மத மற்றும் இறைநம்பிக்கை சுதந்திரத்திற்கான பிரிட்டன் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியாவின் 7 மாநிலங்களில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள மதமாற்ற தடுப்பு சட்டம் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் மிரட்டவே பயன்படுத்தப்படுவதாக இந்தியாவில் தற்போதைய மதச் மற்றும் இறைநம்பிக்கை சுதந்திரம் பற்றிய குறிப்பில் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

 

மத வன்முறைகளை இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடைசியாக கண்டித்திருப்பதாக கூறும் இந்த அறிக்கை, மத சார்பாக தூண்டப்பட்ட வன்முறைகளை உடனடியாக தடுக்க அவரது அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் வாளாயிருந்து விட்டது என்று தெரிவித்துள்ளது.

 

இந்து மத ஆதரவு கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள், இந்து மத கடும்போக்கு குழுவான ஆர்எஸ்எஸோடு நெருக்கிய தொடர்பில் இருந்து வருகின்ற இந்திய நிலைமை கவலைகளை தோற்றுவித்து்ளளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

 

1925ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எஸ்எஸ் இந்து மத புராணங்கள் மற்றும் முற்கால இந்திய வரலாற்றிலிருந்து அதனுடைய இலக்கை கொண்டுள்ளது.

 

இந்தியா இந்து மதத்தவருக்கே என்று கோரும் இது, இந்த நாட்டில் பிறர் வாழ வேண்டுமென்றால் இந்து மத ஆதிக்கத்தை ஏற்றாக வேண்டும் என்று கூறுகிறது.

 

2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை ஆள தொடங்கியதில் இருந்து இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாக கூறுகின்ற இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

Add new comment

10 + 5 =