அவசர நிலையை பிரகடனம் செய்வதாக டிரம்ப மிரட்டல்


அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைச் சுவரை கட்டியமைக்க அவசர நிலையைப் பிரகடனம் செய்யவும் தயங்க போவதில்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 

அடுத்து வரும் நாட்களைப் பொறுத்து தேசிய அளவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவேன் என்று டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

எல்லைச் சுவரை கட்டியமைக்க ராணுவ நிதியைப் பயன்படுத்தும் முடிவில் ட்ரம்ப் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

 

மெக்சிகோ எல்லையில் கட்டப்படவுள்ள சுவருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் நிதி அளிக்க ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதிக்காத பட்சத்தில் இந்த முடிவை அவர் எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் 500 கோடி டாலர் செலவில் இந்த சுவர் எழுப்பப்படுகிறது.

Add new comment

1 + 4 =