துஷ்பிரயோகத்தை கையாள மனமாற்றம், தாழ்ச்சி தேவை – திருத்தந்தை


அருட்தந்தையரின் துஷ்பிரயோக குற்றங்களும், நம்பகத்தன்மையின் நெருக்கடியும் அமெரிக்க ஆயர்களிடம் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளன.

 

மிகவும் ஆழமான இந்த பிரச்சனைகளுக்கு நிர்வாக ரீதியில் தீர்வு காண நினைப்பது ஒரு சோதனை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஆயர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

ஆன்மிக மனமாற்றத்திலும், நற்செய்தி வழங்கும் தூண்டுதலின் வழிகளிலும் தெளிவான மற்றும் தீர்க்கமான ஒருமுகப்படுத்தல் இல்லாமலும் பாதிக்கப்பட்டோருக்கு பதிலளிக்க முயல்வது ஆபத்தை உருவாக்கும் என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

 

ஜனவரி மாத முதல் வாரத்தில் அமெரிக்க ஆயர்களுக்கு நடைபெறும் தியானத்தில் இந்த பிரச்சனைக்கான பதில்கள், உள்ளபூர்வமாக, செபத்தில் அமைந்த, கடவுளின் வார்த்தையையும், மக்களின் வலியையும் கூட்டாக செவிமடுத்தாலால் வழங்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 1 =