உலக பயங்கரவாதத்திற்கு கூட்டாளியாக பாகிஸ்தான்


உலக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் செயல்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது.

 

ஆனால் பாகிஸ்தான் அந்த நிதியை பெற்றுக்கொண்டு, உள்நாட்டில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கத்தவறி விட்டது என அமெரிக்கா கருதுகிறது.

 

பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார்.

 

கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டினார்.

 

இந்த நிலையில் அமெரிக்காவில் புத்தாணடின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புவதாகவும், ஆனால் அந்நாடு எதிரிகளுக்கு அடைக்கலம் தந்து, பாதுகாக்கிறது. அதனால், நல்லுறவை கடைப்பிடிக்க முடியவில்லை என்று பேசியுள்ளார்.

 

பாகிஸ்தானின் புதிய அரசுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Add new comment

4 + 0 =