திருவாரூர் தொகுதியில் உதயநிதி போட்டியா?


திருவாரூர் இடைத்தேர்தலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்டு 7ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக முன்னாள் தலைவருமான கருணாநிதி காலமானாதால், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானது.

 

ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு பெற்ற தொகுதியதக இருப்பதால், திருவாரூரில் திமுக வெற்றி பெற்றாக வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.  

 

வேட்பு மனுத் தாக்கல் வியாழன் முதல் தொடங்கியுள்ள நிலையில், திமுக, அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளராக களமிறங்குவோர் பற்றிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென மூத்த கட்சி உறுப்பினர்கள் விரும்பியதை ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

 

மு.க.ஸ்டாலின் போட்டியிட திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார்.

 

இந்நிலையில், திருவாரூர் இடைதேர்தலில் திமுக சார்பில் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது ரசிகர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.

Add new comment

17 + 0 =