73வது வயதில் காலமானார் ஹாங்காங் ஆயர்


ஹாங்காங் ஆயர் மைக்கேல் இயோங்-ச்செயுங் ஜனவரி 3ம் தேதி இறைவனடி சேர்ந்துள்ளார்.

 

ஆயராக திருப்பொழிவு பெற்ற ஒன்றரை ஆண்டுக்குள், தன்னுடைய 73 வயதில் அவர் காலமாகியுள்ளார்.

 

காலமாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வரை இந்த ஆயரின் நிலைமை சீராக இருந்ததால், மறைமாவட்டம் அதிக கவலையடைந்துள்ளதாக ஹாங்காங் துணை ஆயர் ஜோசப் ஹா ச்சி-ஷிங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஊடங்கங்கள் அதிக கவனம் எடுத்து கொண்டதற்கும், நோயுற்ற ஆயருக்கு பக்தர்கள் செய்த செபங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

 

இந்த ஆயரின் இறப்பை மறைமாவட்டம் வத்திக்கான் தலைமைப்பீடத்திற்கு தெரிவித்துள்ளது.

 

திருச்சபை சட்டப்படி, வெகுவிரைவில், மறைமாவட்ட ஆலோசகர் வாரியத்தால் மறைமாவட்ட நிர்வாகி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

 

நுரையீரல் செயலிழப்பால் இந்த ஆயர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

6 + 3 =