ஆசிய கத்தோலிக்கர்களுக்கு காதினால் போவின் முதன்மைகள்


ஆசிய திருச்சபையின் திட்டமிடுதலில் அமைதி, நீதி, ஒப்புரவு மற்றும் பழங்குடியின உரிமைகளை முதன்மைகளாக கொண்டுள்ளதாக ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பின் தலைவராக வந்துள்ள மியான்மர் யங்கூனின் கர்தினால் சார்லஸ் மயுங் போ தெரிவித்து்ளளார்.

 

ஆசிய பகுதிகளில் கர்தினால் போ திட்டமிட்டுள்ள வரைவில், சமூக வளர்ச்சி மற்றும் மேய்ப்புப்பணி பராமரிப்பில அதிக கவனம் செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டு்ள்ளது.

 

இறைநம்பிக்கையில் ஆசிய திருச்சபையின் அமோக மற்றும் முக்கிய அறுவடை பற்றிய திருத்தந்தை புனித ஜான் பவுலின் குறிப்பும் முக்கியமாக இதிலுள்ளது.

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அழைப்புக்கு விடையளிக்க ஆசிய ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள வாய்ப்பு இதுவென 70 வயதான கர்தினால் போ தெரிவித்துள்ளார்.

 

பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அநீதிகளை அகற்ற திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்துள்ள அழைப்பை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.     

Add new comment

20 + 0 =