மாற்றுத்திறனாளி தொழிலாளர் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்


வேலை செய்து வருகின்ற மாற்றுத்திறனாளி பெண்கள் அனைவரும் தமிழக அரசின் அம்மா மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அறிவித்துள்ளது.

 

வேலை செய்துவரும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன உதவி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் சலுகை வழங்க வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்ச மானியமாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். 

 

எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில் வேலை செய்து வரும் மாற்றுத்திறனாளி பெண்களில் 381 பேர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

 

எனவே 18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலை செய்யும் மாற்றுத்திறனாளி பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளது.  

Add new comment

8 + 8 =