சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு கடையடைப்பு


கேரளாவிலுள்ள சபரிமலை கோவிலுக்குள் 50 வயதுக்குள்ளான 2 பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததை தொடாந்து, கேரள மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இதன் காரணமாக மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகினர்.

 

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய மட்டுமே அனுமதி இருந்து இருந்தது.

 

இந்த வழக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். ஆணும் பெண்ணும் சமம் என்று அதிரடியாக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும்  தெரிவித்து வந்த கடும் எதிர்ப்புகளை தாண்டியும் 40 வயதுடைய இரு பெண்கள் சபரிமலையில் நேற்று புதன்கிழமை ஐயப்பனை தரிசனம் செய்தனர்

 

இதனால், சபரிமலை புனித தலத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகவும், கேரள மாநில முதல்வர் உடனே பதவிவிலக வேண்டும் என்றும் கேரள மாநிலம் முழுவதும் ஜயப்ப பக்தர்கள் மற்றும் பாஜக-வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் 54 வயதான ஒருவர் போராட்டம் தொடர்பாக இறந்துள்ள நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளாவில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. 

Add new comment

1 + 5 =