அதிபரின் கண்டனங்களை கண்டுக்கொள்ளமால் இருங்கள் – பிலிப்பீன்ஸ் ஆயர்


பிலீப்பீன்ஸ் அதிபர் ரெட்ரிகோ டுடேர்டேயின் திருச்சபைக்கு எதிரான கண்டனங்களை மக்கள் கண்டுக்கொள்ள கூடாது என்று அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முன்னாள் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

 

புத்தாண்டு செய்தியில், கடவுளை முட்டாள் என்று அழைத்து தேவாலயங்களுக்கு செல்வது பயனில்லாதது என்று கற்பிப்போர் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் என்று லின்காயன் டகுபான் மறைமாவட்ட பேராயர் சாக்ரடஸ் வில்லேகாஸ் தெரிவித்துள்ளார்.

 

தேவாலயத்திற்கு செல்வது பயனில்லாதது என்றும், திருப்பலியில் பங்கேற்க வேண்டாம் என்றும் கூறுவோருக்கு செவிமடுக்க வேண்டாம். இவற்றை நகைச்சுவையாக பார்ப்போர் பலர் உள்ளனர் என்று இந்த பேராயர் கூறியுள்ளார்.

 

குழந்தைகள் தவறான மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளலாம் என அஞ்சுவதாக தனது ஞானமகன் சேத்துக்கு இந்த பேராயர் வில்லேகாஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த கடிதத்தில் அதிபரின் பெயரை குறிப்பிடாத இந்த பேராயர் அதிபரின் கூற்றுக்களை தெளிவாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

Add new comment

5 + 12 =