மதப்பிரிவுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண அமைச்சரவை துணை குழு


மலங்கரா திருச்சபையின் கீழுள்ள ஆர்த்தோடாக்ஸ் மற்றும் ஜகோபைட் பிரிவுகளுக்கு இடையில் நிலவி வருகின்ற சர்ச்சைக்கு இணக்கமான தீர்வுக்காண அமைச்சரவை துணை குழுவை நியமிக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

தொழிற்துறை அமைச்சரும், இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான இபி ஜெயராமன் இந்த அமைச்சரவை குழுவின் கூட்டுநராக இருப்பார்.

 

இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.

 

இந்த இரு மத பிரிவுகளுக்கு இடையில் நிலவி வருகின்ற பிரச்சனைக்கு தீர்வு காண இயன்ற முயற்சிகள் எடுக்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் பிரனாய் விஜயன் தெரிவித்தார்.

Add new comment

5 + 7 =