98வது வயதில் காலமானார் இறையியலாளர் சாமுவேல் ராயன்


இயேசு சபை இறையியலாளர் அருட்தந்தை சாமுவேல் ராயன் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் காலமானார்.

 

இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாநகரத்திலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பயனின்றி இறந்துவிட்டதாக கேரளா மாகாண இயேசு சபை மாநில தலைவர் அருட்தந்தை கே. ஜார்ஜ் தெரிவித்து்ளளார்.

 

98 வயதான அருட்தந்தை சாமுவேல் ராயன் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்றிருந்தார்.

 

முன்னாளில் கொய்லோன் என்று அறியப்பட்ட தற்போதைய கொல்லம் மாவட்டத்தின் கும்பாலாம் கிராமத்தில் 1920ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சாமுவேல் ராயன் பிறந்தார்.

 

1939ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்த இவர் 1955ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி அருட்தந்தையாக திருப்பொழிவு பெற்றார்.

 

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் விவிலியத்தின் புரட்சிகர மொழிபெயர்ப்புக்கு இந்த இறையியலாளரை இந்தியா என்றென்றும் நினைவுகூரும் என்று குருமடத்தில் படித்த காலத்தில் இருந்தே இவரை அறிந்து வைத்திருக்கும் குய்லோன் ஆயர் பால் மல்லேஸ்வரி கூறியுள்ளார்.

 

விடுதலை இறையியலின் ஒரு பகுதி என்று அறிப்படும் இவரது இறையியல், விடுதலை இறையியலின் தீவிர பதிப்பு அல்ல என்றும், நற்செய்தியை ஆழமாக தியானித்ததன் மூலம் இவரது இந்த இறையியல் வந்தததாகும் என்று ஆயர் மல்லேஸ்வரி கூறியு்ள்ளார்.

Add new comment

2 + 1 =