சபரிமலையில் இரு பெண்கள் நுழைந்து தரிசனம்


சபரிமலையில் புதன்க்கிழமை அதிகாலையில் 40 மற்றும் 39 வயதான இரு பெண்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பியுள்ளனர்.

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம், தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

ஆனால், இதற்கு இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

எனவே, சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

 

முன்னதாக, 50 வயதுக்குள்ளான பெண்கள் ஐயப்பன் கோயிலில் நுழைகின்ற முயற்சி பயலனளிக்கவில்லை.

 

21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.

 

புதன்கிழமை அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர்.

 

சபரிமலை சென்றுவந்தது குறித்துப் பிந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் 2-வது முறையாக சபரிமலைக்கு வந்துள்ளோம். ஆனால், இந்த முறை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறோம். தரிசனம் செய்ய காவல்துறை உதவினார்கள். என்று தெரிவித்துள்ளனர்.

Add new comment

5 + 13 =