அரசியல்வாதிகள் பேறுபெற்றோர் – லிமரிக் மறைமாவட்ட ஆயர்


அரசியல் உயர்வான இறையழைத்தல் என்றும், மக்கள் அரசியல்வாதிகளுக்காக செபிக்க வேண்டுமெனவும் லிமரிக் மறைமாவட்ட ஆயர் தெரிவி்த்துள்ளார்.

 

அரசியல் செயல்பாடுகள் தவறாக போய்விட்டால், அதனால் பெரிய விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுவதாக லிமரிக் மறைமாவட்ட ஆயர் பிரின்டன் லியேகி தெரிவித்துள்ளார்.

 

இதற்கு எடுத்துக்காட்டாக வன்முறை அல்லது போரின் பாதிப்புக்களால் உலக நாடுகளில் ஒவ்வொரு 6 சிறார்களில் ஒருவர் பாதிக்கப்படுவதை இந்த ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வட அயர்லாந்தில் ஒவ்வொரு 4 சிறார்களிலும் ஒருவர் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேசமான அரசியல் அதிக தீமைகளுக்கு வழிநடத்துகிறது.

 

குடியேறிகளுக்கு வரவேற்பு இல்லாமை, இனவெறி, சுற்றுச்சூழல் பற்றி அக்கறையின்மை, வீடில்லாமை ஆகியவை மோசமான அரசியலால் ஏற்பட்டுள்ள தீமைகளாகும் என்று ஆயர் பிரின்டன் லியேகி தெரிவிக்கிறார்.

 

அரசியல் உயர்வானதொரு இறையழைத்தல் என்று தெரிவித்திருக்கும் ஆயர் பிரின்டன் லியேகி, நாம் அரசியல்வாதிகளுக்காக செபிக்க வேண்டும் என்றும், உயர்வான மதிப்பீடுகளோடு அரசியலில் நுழைவதற்கு இளைஞர்கள் முயல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

சமூகத்தின் அன்பை செயல்படுத்த செய்வதால், அரசியலை கிறிஸ்தவ இறைஇரக்கத்தின் உயாவான வடிவமாக கருதலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Add new comment

3 + 5 =