14 வகை கிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – நிலைக்குமா?


தமிழ் நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீது புத்தாண்டு நாள் தொடங்கி தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

 

இதனை முறையாக செயல்படுத்துவதற்கு தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மூத்த இந்திய குடிமை அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரரத்னு, சந்தோஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், இந்த பிளாஸ்டிக் தடை நிலைக்குமா என்று பல்வேறு விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Add new comment

1 + 2 =