கருணாநிதி தொகுதியில் ஸ்டாலின் போட்டியா?


மறைந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றிருந்த திருவாரூர் தொகுதியில் அந்த கட்சி சார்பாக ஸ்டாலின் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

திருவாரூர் சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டை பொறுத்தவரை எல்லா மாநிலக் கட்சிகளுக்கும் ஓர் அக்னிப் பரீட்சை.

 

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 2016 தேர்தலில் இந்தத் தொகுதியில், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

கருணாநிதியின் மறைந்ததை அடுத்து இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தொகுதியில் பெறுகின்ற வெற்றி திராவிட முன்னேற்ற கழகத்தின் கௌரவப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

 

இந்த தொகுதியில் கடந்த 1977 முதல் 2016ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட்டும், திமுகவும்தான் மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன.

 

கருணாநிதியின் சொந்த ஊர், சொந்தத் தொகுதி, கருணாநிதி இறுதியாகப் போட்டியிட்ட தொகுதி என்பதால் இந்தத் தொகுதியை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், பொருளாளருமான துரைமுருகனும், மூத்த தலைவர்கள் சிலரும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Add new comment

1 + 0 =