சபரிமலையில் நுழைவதற்கு பெண்களின் சுவர் போராட்டம்


இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னரும், எல்லா வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைய விடாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சுவர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

 

ஐயப்ப தரிசனத்துக்கு செல்லும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

 

இந்நிலையில் சபரிமலை வழிப்பாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாற்றங்களை ஏற்க வலியுறுத்தி மாநில அரசு ஆதரவுடன் மகளிர் சுவர் போராட்டத்தை புத்தாண்டு தினமாள இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியுள்ளனர்.

 

கேரளத்தின் வட பகுதியிலுள்ள காசர்கோட்டிலிருந்து கேரளத்தின் தெற்கில் பாறசாலை வரை 640 கி.மீ. தொலைவில் பெண்கள் வரிசையாக நின்று மனிதச் சுவர் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதுமுள்ள சுமார் 31 லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் எனக் கருதப்படுகிறது.

 

"கேரளாவில் நடக்கும் மகளிர் சுவர் போராட்டம் சபரிமலை விவகாரம் தொடர்பாகவே நடத்தப்படுகிறது. சபரிமலைக்கு பெண்கள் யாரையும் வர வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Add new comment

4 + 0 =