பிலிப்பீன்ஸ் வெள்ளப்பெருக்கில் 68 பேர் பலி


பிலிப்பீன்ஸ் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

பிலிப்பீன்ஸ் நாட்டில் கடந்த சனிக்கிழமை வீசிய உஸ்மான் புயலுக்கு பின்னர். அந்நாட்டின் தெற்கிலுள்ள மிண்டானோ தீவில் 6.9ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவாலும். புயலாலும் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

 

வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கியிருப்பவர்களை மீட்கின்ற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Add new comment

2 + 11 =