வங்க தேசத்தில் ஆளும் கட்சியே வெற்றி


வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டு தலைமையமைச்சர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது. .

 

வங்கதேசத்தில் பொதுத்தோ்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

 

10 கோடி வாக்களிப்போர் இருந்ததால் 6 லட்சம் போ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.  

 

வங்கதேசத்தை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 இடங்களில் 151 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

 

இந்த தேர்தல் வாக்கெடுப்பின்போது, வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மோதல், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சுமார் 17 போ் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

 

கலவரத்தை கட்டுப்படுத்த வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

 

இரவு அறிவிக்கப்பட்ட முடிவுகளில், ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

4 + 3 =