வீடில்லாதோருக்கு சிகிச்சை மையம் தொடங்கிய வத்திக்கான்


வீடில்லாதோருக்கும், ஏழைகளுக்கும் சேவை செய்வதற்காக புதிய மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளதாக கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு சற்று முன்னதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

 

புனித பேதுரு சதுக்கத்திற்கு வெளியே சிறிதொரு இடத்தில் வழங்கப்பட்டு வந்த சேவையை இதன் மூலம் வத்திக்கான் விரிவுப்படுத்தியுள்ளது.

 

இரக்கத்தின் அன்னை சிகிச்சை மையத்தில், கருவிகள் முற்றிலும் அமைக்கப்பட்ட பரிசோதனை அறைகள், ஓர் அலுவலக அறை, காத்திருப்பு அறை ஆகியவை உள்ளன.

 

புனித பேதுரு சதுக்கத்தின் கை போன்ற வளைவான கட்டுமானத்தின் வடக்கு பகுதிக்கு அப்பால் வத்திக்கானின் இரண்டாவது தபால் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தில் இந்த புதிய சிகிச்சை மையம் அமைக்க்ப்பட்டு்ளளது.

 

2015ம் ஆண்டு வீடில்லாதோருக்கு கழிவறை மற்றும் குளியலறை திறக்கப்பட்டத்தற்கு அடுத்து இந்த புதிய சிகிச்சை மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. 

 

திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சிகிச்சை மையம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வீடில்லாதோர் பெரும்பாலும் அவதிக்குள்ளாகும் கால் பிரச்சனைகளுக்கு திங்கள்கிழமை காலை சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொது மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு சதுக்கத்தில் சந்திக்கின்ற ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த சிகிச்சை மையம் முதலுதவி வழங்கும் மையமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

8 + 7 =