எகிப்தில் 40 தீவிரவாதிகள் கொலை


எகிப்தில் 40 தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கிஸா மற்றும் வடக்கு சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

 

இந்த தீவிரவாதிகள் அனைவரும் சுற்றுலா தலங்கள், தேவாலயங்கள் மற்றும் ராணுவ அலுவலகங்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

கிஸா பிரமிட் வளாக பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அடுத்து இந்த தேடுதல் வேட்டை தொடங்கியது.

 

வியட்நாமை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட கிஸா பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

Add new comment

4 + 0 =