ஆஸ்திரேலியாவை தேற்கடித்தது இந்திய கிரிக்கெட் அணி


ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த தொடரில் 2-1 என்று கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

 

1981ம் ஆண்டுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் முதல்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியை வென்றிருககிறது.

 

கடந்த 26-ஆம் தேதியன்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் மட்டை பிடித்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 151 ரன்களை மட்டுமே குவித்தது.  

 

அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது.

 

வெற்றிபெற 399 ரன்கள் இலக்குடன் இறங்கிய ஆஸ்திரேலிய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களை மட்டுமே எடுத்தது.

Add new comment

1 + 0 =