கருக்கலைப்பை நிராகரித்து, மனித வாழ்ககையை பாதுகாத்து கொள்ளுங்கள் – இத்தாலிய ஆயர்கள்


மனித வாழ்க்கையை பாதுகாப்பது என்பது கருக்கலைப்பை நிராகரித்தல், நோயாளிகளை பாமரித்தல், குடியேறிகளுக்கு ஓரளவு சிறந்த வரவேற்ப்பை வழங்குதல், முதியோரின் பங்களிப்புக்கு மதிப்பளித்தல், சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்தல் என எல்லாவற்றையும் குறிக்கிறது என்று இத்தாலிய ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பிப்ரவரி 3ம் நாள் பின்பற்றப்படும் வாழ்க்கை நாளை முன்னிட்டு டிசம்பர் மாதம் ஆயர்கள் பேரவை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மனிதர் ஒவ்வொருவரும் பலவீனமாக இருக்கின்றபோது, நோய், வன்முறை அல்லது ஒடுக்குமுறையால் அவதிப்படுவோரை பராமரிக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கண்டு கொள்ளாமல் புறக்கணித்தல், சுகாதார நிலையில் ஏற்படுத்தும் தாக்குதலால் ஏற்படுத்தும் ஆபத்துகளை யாரும் மறக்க முடியாது என்று இந்த ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உண்மையான சுற்றுச்சூழல் முழுமையானதாகவும் வாழ்க்கையை பாதுகாப்பதாகவும் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 

முதியோரின் ஞானமும், அவர்களின் அனுபவமும் நாட்டை பாதிக்கும் புவியியல் மற்றும் ஆன்மிக நிலநடுக்கத்தை கையாளும் தலைமுறைகளுக்கு இடையிலான திடமான கூட்டணியாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளதை ஆயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Add new comment

3 + 1 =