வீடில்லாதோர் பிரச்சனைக்கு அரசை குறைகூறும் அருட்சகோதரி


தங்களின் ஆதாயங்களை அதிகரித்து கொள்வதற்காக நிலபிரபுக்கள் வாடகைக்கு விடுகின்ற வீடுகளில் இருந்து பலரை வெளியேற்றியதே அயாலாந்தில் வீடில்லாதோர் அதிகரித்துள்ளதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று வீடில்லாதோர் பற்றிய விழிப்புணர்வு அளித்து வருகின்ற அருட்சகோதரி ஸ்டனி்லாஸ் கென்னடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

வாடகை வீடுகளில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாப்பதற்கு மேம்பட்ட சட்டங்கள் இயேற்றப்பட வேண்டும் என்று ஃபோக்கஸ் அயர்லாந்து என்ற அறக்கட்டளையின் நிறுவனரான இந்த அருட்சகோதரி கூறியுள்ளார்.

 

அயர்லாந்தில் 9,698 பேர் வீடில்லாமல் அவதிப்படுகின்றனர். அதில் 3,829 பேர் குழந்தைகள்.

 

அயர்லாந்தில் வீட்டுப் பிரச்சனை மிகவும் மேசமாகுவது, தனியார் வாடகை தொழில்துறையில் ஸ்திரமின்மையை உருவாக்கி வீடில்லாத அனைவரையும் ஆபத்திறகு உள்ளாக்கும் என்று பிரபல சமூக நீதிக்கான ஜாம்பாவன் நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனால், இளைஞர்களும், முதியோரின் குழந்தைகள் என அனைவரும் ஆபத்தில் சிக்கிக்கொள்வர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

2019ம் ஆண்டு 80 வயதாகும் இந்த அருட்சகோதரி வீடில்லாதோர் பிரச்சனையில் சமூக அர்பபணம் வேண்டும் என்றும், நாட்டின் திட்டங்களால் வாங்கக்கூடிய அளவிலான வீட்டு வசதி கொள்கைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

ஒவ்வொரு அரசாலும் கொண்டுவரப்பட்ட சமூக வீட்டு வசதி திட்டங்கள் வீட்டு வசதிகளை செய்து கொடுக்கின்ற பொறுப்புகளை உள்ளூர் அதிகாரிகளிடம் வழங்காமல் சந்தையை நம்பி இருக்கும்படி செய்துவிட்டன என்று அருட்சகோதரி ஸ்டனி்லாஸ் கென்னடி கூறியுள்ளார்.  

 

வீட்டு சந்தையானது லாபத்தை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், சமூக அக்கறை இதற்கு இருக்க போவதில்லை. இதனால், வீட்டு வசதி எளிதாக கிடைக்க போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 0 =