பிலிப்பீன்ஸ் அருகில் நிலநடுக்கம் – சுனாமி பேரலை எச்சரிக்கை


பிலிப்பின்ஸ் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை நிகழ்ந்தது.

இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

பிலிப்பின்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிண்டானாவோ தீவு அருகே, ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது.
 

டவாவோ நகருக்கு தென்கிழக்கே 59 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் நிகழந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
 

இந்த நிலநடுக்கத்தின காரணமாக சுனாமி பேரலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

 

இந்தோனீஷியா மற்றும் பிலிப்பீன்ஸ் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலநடுக்க அதிர்வுகள், அருகிலுள்ள நகரங்களில் மிதமாகவே உணரப்பட்டதாக பிலிப்பின்ஸ் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

 

உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படும் வாய்பபு குறைவாக இருந்தாலும், நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add new comment

12 + 3 =