இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம் வாபஸ்


கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவ்வின் பேச்சுவார்த்தையை தொடா்ந்து இந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஆசிரியா்கள் பலரும் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

 

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனா்.

 

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எழுத்துப்பூா்வமாக பிரதீப் யாதவ் உறுதி அளித்தார். இதனால் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டத்தை திரும்ப பெறுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 

இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கை மற்றும் ஊதிய முரண்பாடு தொடா்பாக ஒருநபா் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

 

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னா் அது தொடா்பாக உரிய நடவடிக்கை எட்டப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவ் கூறியுள்ளார்.

Add new comment

1 + 4 =