சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – 2019 ஜனவரி முதல் நாளில் போராட்டம்


இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னரும், கேரளாவிலுள்ள சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2019 ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு நாளில் கேரளாவில் பெண்கள் சுவா் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த தீா்ப்பை தொடா்ந்து கோவிலுக்குள் செல்ல இளம் பெண்கள் பலரும் முயற்சிகள் மேற்கொண்டனா்.

 

ஆனால் பல்வேறுகட்ட போராட்டங்கள், தடியடி, மோதல் சம்பவங்களைத் தொடா்ந்து இதுவரை கோவிலுக்குள் இளம் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

 

கேரளா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மகர பூஜை முடிவடைவதற்குள் பெண்கள் மட்டும் சென்று வழிபடும் வகையில் ஒருநாள் தனியாக ஒதுக்கப்படும் என்று அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில் வருகின்ற ஜனவரி 1ம் தேதி மனிதச்சங்கிலி போன்று சுவா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மும்பையைச் சோ்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு இருக்கக் கூடிய உரிமையை நிலைநாட்டும் விதமாக 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கேரளா முழுவதும் கைகளை கோர்த்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

Add new comment

1 + 9 =