சீனா பற்றி எச்சரிக்கை விடுத்து கர்தினால் சென் திருத்தந்தைக்கு கடிதம்


சீனாவிலுள்ள நிழலுலக திருச்சபை சந்திக்கின்ற நெருக்கடியில் வத்திக்கான் கவனம் செலுத்த வேண்டும் என முறையிட்டு ரோம் நகருக்கு சென்ற கர்தினால் ஜோசப் சென் ஸி-கலுன் 7 பக்க கடிதத்தை திருத்தந்தை பிராசிஸிடம் வழங்கியுள்ளார்.

 

ஆயர்களை நியமிப்பது தொடர்பாக வத்திக்கான்-சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தியது தொடங்கி நிழலுலக அருட்தந்தையர் கர்தினால் சென்னிடம் அழுது முறையிட்டுள்ளதாக ஹாங்காங்கின் ஓய்வுபெற்ற ஆயரான சென் தெரிவித்திருந்தார்.

 

சீன-வத்திக்கான் தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், நிழலுலக துறவியரை, தாங்கள் அருட்தந்தையர் என்பதை வெளிப்படையாக அறிவித்து சீன கத்தோலிக்க நாட்டுபற்றாளர் கூட்டமைப்பில் இருந்து அருட்தந்தை சான்றிதழ் வாங்குவதற்கு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக கர்தினால் சென் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த ஒப்பந்தத்தின் சில அம்சங்கள் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பதால், நிழலுலக அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும் என்ன செய்வது என்று அறியாமல் திகை்பபதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்வாறு ஒப்பந்த அம்சங்கள் வெளிப்படு்த்தப்படாமல் இருப்பதால், அதிகாரிகள் சொல்வது சரியா, தவறா என்று கூட தெரியாமல் சில அருட்தந்தையர்கள் தப்பியோடிவிட்டதாகவும், காணாமல் போய்விட்டதாகவும், கோபமடைந்து சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

சீனாவிலுள்ள கத்தோலிக்க திருச்சபை புதிய சித்ரவதையை எதிர்கொண்டுள்ளதாகவும், சீனாவில் இயங்கி வருகின்ற நிழலுலக திருச்சபையை அடக்கி ஒடுக்க சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு வத்திக்கான் கத்தோலிக்க தலைமைப்பீடம் உதவுவதாகவும் கர்தினால் சென் கூறியுள்ளார்.

 

திருத்த்நதை பிரான்சிஸை நேரடியாக சந்தித்து இந்த நெருக்கடி பற்றி தெரிவித்து, கடைசி முறையாக திருத்தந்தை இந்த விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டுமென கோரப்போவதாக தெரிவித்த கர்தினால் சென்  அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை ரோம் நகர் சென்றிருந்தார்.

Add new comment

17 + 0 =