பாங்காக் தடுப்பு முகாமில் பாகிஸ்தான் கிறிஸ்தவ குடும்பங்கள்


விசா காலம் முடிந்த பின்னர் நாட்டில் தங்கியிருப்போரை தேடி கைது செய்துவரும் தாய்லாந்து குடிவரவு துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் பாகிஸ்தான் கிறிஸ்தவ தஞ்சம் கோரிகள் இப்போது பாங்காக் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு்ளளனர்.

 

பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 100 பாகிஸ்தான் தஞ்சம்கோரிகள் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

 

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் வழங்கிய அகதிகள் தகுநிலை இருக்கின்ற சிலரும் இவ்வாறு அடைக்க வைக்கப்பட்டோரில் அடங்குகின்றனர்.

 

ஐநாவின் அகதிகள் தகுநிலை வைத்திருந்தால், விசா தொடர்பான விதிமீறல்களால் அவர்கள் அடைத்து வைக்கப்படுவதிலிருந்து அது பாதுகாக்கும். ஆனால், தாய்லாந்தில் அதுவும் செல்லுபடியாகவில்லை.

 

சமீபத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் உள்பட பாகிஸ்தான் கிறிஸ்தவ குடும்பங்களை சேர்ந்த 20 பேர் இந்த முகாமில் அடைக்க்பபட்டுள்ளனர்.

 

எல்லாரும் பாங்காக் குடிவரவு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பொதுவாக, இவர்கள் நீண்ட விசாரணைக்கு பின்னர், விடுதலை செ்யயப்படவர் அல்லது அவரவர் தாய் நாட்டிற்கு நாடு கடத்தப்படுவர்.

 

இந்த பாகிஸ்தானிய கிறிஸ்தவ குடும்பங்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படும் நிலையில் அவர்கள் பெரும் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

7 + 10 =