“அரசியல் கல்வியை சீனாவிலுள்ள குருமடங்கள் வலுப்படுத்த வேண்டும்”


சீனாவின் கத்தோலிக்க திருச்சபையின் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது என்றும், சீனாவிலுள்ள குருமடங்கள் அரசியல் சித்தாந்த கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்றும் உயர்மட்ட சீன அதிகாரி ஒருவர் கத்தோலிக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

சீன கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் பேரவை மற்றும் சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய வேலை துறையின் ஐக்கிய முன்னணியின் துணை இயக்குநர் வாங் சுவோயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சுதந்திரம், சுயவிடுதலை மற்றும் சுய நிர்வாக கொள்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அவர் உரையாற்றுகையில் தெரிவித்து்ளளார்.

 

சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பு உள்பட எல்லா ஐந்து அதிகாரபூர்வ மதங்களின் நாடு அளவிலான நிறுவனங்களின் நேரடி கட்டு்ப்பாட்டை மத்திய வேலை துறையின் ஐக்கிய முன்னணி கொண்டுள்ளது.

 

ஜியாங்சு மாகாணத்தில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நூற்றுக்கு மேலான ஆயர்கள், அருட்தந்தையர்கள். அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர் கலந்து கொண்டனர்.  

Add new comment

2 + 0 =