ஆபத்தான உயரத்தை அடைந்த எரிமலை குழம்பு


இந்தோனீசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு காரணமாக அமைந்த அனாக் கிராக்கதோவ் எரிமலை தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் அதனுடைய  லாவா குழம்பு ஆபத்தான உயரத்தை அடைந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

இந்தோனேசியாவில் டிசம்பர் 23ம் தேதி கடலடியில் அனாக் கிராக்கதோவ் எரிமலை வெடித்து அதனடைய லாவா குழம்பு கடல் நீருடன் கலந்ததில் வெளிப்பட்ட அதிக சக்தியால் சுனாமி பேரலைகள் தாக்கின.

 

இதில் 429 போர் இறந்த நிலையில். ஆயிரத்திற்கு மேலானோர்  காயமடைந்துள்ளனர்.

 

மேலும், இந்த எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது. அதனால் லாவா குழம்புகள் அதிகபட்ச உயரத்தை அடைந்துள்ளது.

 

இதன் காரணமாக  மீண்டும் மற்றுமொரு சுனாமி பேரலை தாக்குகின்ற ஆபத்து நிலவவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இதனை ஒட்டிய மூன்று கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டுமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Add new comment

11 + 1 =